திருத்தணி முருகன் கோவிலில் வெள்ளம்!...பக்தர்களின் நிலை என்ன ஆனது?
Flood in tiruthani murugan temple what happened to the devotees
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய நிலையில், இந்த மாதம் 2வது வாரத்தில் பருவமழை தீவிரமடைய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு பரவலாக மலை பெய்து வந்தது. இந்த நிலையில், திருத்தணியில் இன்று வானில் கருமேகங்கள் சூழ்ந்து அங்கு பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணாமாக திருத்தணி முருகன் கோவிலின் மலைப்பாதை படிக்கட்டு வழியாக சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் மழை நீரில் நனைந்த படியே சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் மலைப்பாதை படிக்கட்டுகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சில பக்தர்கள் அவதி அடைந்தனர். மலைக்கோவிலில் மாட வீதிகளை சுற்றி மழைநீர் தேங்கியதால், மழை நீரில் நினைந்த படியே முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதே போல், திருத்தணி நகரத்தில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
English Summary
Flood in tiruthani murugan temple what happened to the devotees