₹5 கோடி மதிப்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள்.. மார்டின் குழுமம் வழங்கியது. - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ₹5 கோடி மதிப்பில் வெள்ள நிவாரணப் பொருட்களை  மார்டின் குழுமம் வழங்கியது .

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை மார்ட்டின் குழுமம் வழங்கியது.இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களுள் ஒன்றான மார்டின் குழுமம், சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறது.  மார்டின் குழுமத்தின் இந்த சமூகநல நடவடிக்கையின் காரணமாக, புதுச்சேரியிலும் மற்றும் தமிழ்நாட்டின் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் 70,000 – க்கும் அதிகமான குடும்பங்கள் பலனடையவிருக்கின்றன.  

மார்டின் குழுமத்தின் இயக்குனர் லீமா ரோஸ் மார்டின்  மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்ல்ஸ் மார்டின் ஆகியோர் ₹5 கோடி மதிப்புள்ள  அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை ஏற்றிச்செல்லும் டிரக்குகளின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள்- ஜான்குமார், அங்காளன், கல்யாணசுந்தரம், சிவசங்கரன், ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.மார்டின் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்ல்ஸ் மார்டின் இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில், “பேரிடர்களால் ஏற்படும் நெருக்கடி காலங்களில் பாதிப்பிற்கு ஆளாகும் சமூகங்களுக்கு ஆதரவளிப்பது எமது செயல்திட்டத்தின் ஒரு மைய அம்சமாக எப்போதும் இருந்து வருகிறது. அதுமட்டுமன்றி, சிறப்பான எதிர்காலத்தை நம் நாட்டில் உருவாக்குவதற்காக கல்வி, உடல்நல பராமரிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய பிரிவுகளில் சிறந்த முன்னெடுப்புகளால் அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்.” என்று கூறினார். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கடும் சிரமத்தை குறைப்பதற்கு உதவ மார்டின் குழுமத்தால் வழங்கப்படுகின்ற நிவாரணப் பொருட்களின் தொகுப்பில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை மாவு மற்றும் அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.  சமூக நலவாழ்வின் மீது தன்முனைப்பு அணுகுமுறையை கொண்டிருப்பதற்காக மக்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கும் மார்டின் குழுமம், இயற்கை பேரிடர் நிகழ்வுகளின்போது ஆதரவு வழங்குவதில் எப்போதும் முன்னிலை வகித்து வந்திருக்கிறது.  

2018-ம் ஆண்டில் நிகழ்ந்த கஜா புயல் பாதிப்பின்போது தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ₹5 கோடி நிதியை இக்குழுமம் நன்கொடையாக வழங்கியிருந்தது.  அது மட்டுமில்லாமல், ₹2.94 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களையும் வழங்கி உதவியிருந்தது.  2020 – ம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்று ஏற்படுத்திய பேரழிவை உலகமே எதிர்த்துப் போராடியபோது ₹12 கோடி மதிப்புள்ள மருத்துவ சாதனங்களையும் மற்றும் நிவாரணப் பொருட்களையும் இக்குழுமம் வழங்கியிருந்தது.  சமீபத்தில் கேரளா மாநிலத்தின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காக ₹2 கோடியை நன்கொடையாக மார்டின் குழுமம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.  

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவுவதற்கான இந்த சமீபத்திய முன்னெடுப்பு திட்டமானது, சவால்மிக்க நெருக்கடி காலத்தில் ஆதரவு வழங்குவதிலும் மற்றும் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு வருவதற்கு உதவுவதிலும் மார்டின் குழுமம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கு இது எடுத்துக்காட்டாக திகழ்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood relief materials worth Rs 5 crore Presented by Martin Group


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->