தமிழகத்தின் 9 மாவட்டங்கள் கவனம்! மத்தியில் இருந்து வந்த எச்சரிக்கை!
flood warning in Cauvery river by central water commission
காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வரக்கூடும் என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து காவிரி கரையோரம் உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கேரள மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து ஆனது அதிகளவில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு வினாடிக்கு இரண்டரை லட்சம் கனஅடிநீரானது வந்து கொண்டிருந்தது.
தற்பொழுது மீண்டும் கர்நாடகா கேரளா பகுதியில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து ஆனது அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மத்திய நீர் ஆணையம் நாளை ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வரக்கூடும் என்பதால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் ஈரோடு நாமக்கல் கரூர் திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
English Summary
flood warning in Cauvery river by central water commission