வெள்ளக்காடான கோவை!...கொட்டித்தீர்த்த பலத்த கனமழையால் பயணிகளுடன் சிக்கிய பேருந்து! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக கோவையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில்,  நேற்று இடி, மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் கோவையில் பலத்த கன மழை கொட்டித்தீர்த்தது.

கோவையில் உள்ள அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலையில் மழைநீர் ஆறு போல் ஓடிய நிலையில், மழைநீர்  அனைத்தும் கோவை ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியது.

இதே போல், கோவை அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  கோவை சிவானந்தாகாலனியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகளவில் தேங்கியது.

இதனால் வாகன ஓட்டிகள், அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, காந்திபுரம் நோக்கி சென்ற  தனியார் பேருந்து ஒன்று, கோவை சிவானந்தாகாலனியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக சென்றபோது அங்கு அதிகளவில் தண்ணீர் தேங்கியதால்,  தீயணைப்பு வீரர்கள் மூலம் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flooded coimbatore bus stuck with passengers due to heavy rain


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->