ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது?...ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!...புதிய முதமைச்சர் யார்? - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்து வந்தது. தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு, கடந்த மாதம் 18ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தலும், தொடர்ந்து  25ம் தேதி 2ம் கட்ட தேர்தல் மற்றும் அக்டோபர் 1ம் தேதி  மூன்றாம் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்த ஒமர் அப்துல்லா, ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து, அவர் விரைவில் புதிய முதலமைச்சராக  பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான அக்டோபர் 31, 2019 தேதியிட்ட முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த 5 ஆண்டுகாலமாக செயல்பாட்டில் இருந்த உத்தரவை ரத்துசெய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is happening in jammu and kashmir president rule withdrawn who is the new chief minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->