மிகவும் மோசமான இடத்தில் இந்தியா!...உலக பட்டினி குறியீட்டில் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


கன்சர்ன் ஓல்டுவைட், ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர்லைப் ஆகியவை நடத்திய  பட்டினிக் குறியீட்டின்  கணக்கெடுக்கப்பில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது.

உலக நாடுகளில் பசியின் அளவை கண்காணிப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது.

அந்த வகையில், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனிதநேய அமைப்பான னசர்ன் ஓல்டுவைட், ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர்லைப் ஆகியவை  136 நாடுகளில் பட்டினிக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கெடுக்கப்பட்ட 19-வது பட்டியலை  வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது. மேலும், அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், மியான்மர் மற்றும் வங்கதேசத்தை விட இந்தியா பின்தங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த பட்டியலில், இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாக உள்ளதாகவும், அதே சமயம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கையில், நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளதாக கூறியுள்ளது. அதே சமயத்தில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சற்று மேலே இந்தியா உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India in the worst place shocking information in the world hunger index


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->