குற்றாலம் : தொடர்ந்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்க 3 வது நாளாக தடை நீடிப்பு..!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

இதைத் தொடர்ந்து அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப் பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு துணி துவைக்கவோ, குளிக்கவோ, விவசாய பணிகளுக்காகவோ தென்காசி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதையடுத்து இந்த ஆண்டு குற்றாலத்தில் சாரல் சீசன் முன்கூட்டியே தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையால் அருவிகளில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதனிடையே சில தனியார் இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப் படுவதாகத் தகவல் வெளியானதையடுத்து, கோட்டாட்சியர் அந்த தனியார் அருவிகள் உள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அங்கு குளித்துக் கொண்டிருந்த பயணிகளை வெளியேற்றி அருவிகளுக்கு செல்வதற்கான கதவுகளைப் பூட்டி சீல் வைத்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flooding in 3rd Consecutive Day in Courtalam Falls


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->