திடீரென இடிந்து விழுந்த பறக்கும் ரெயில் பாலம் - ஊழியர்களின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள வேளச்சேரி மற்றும் பரங்கிமலையை இணைக்கும் விதமாக 5 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் பணிகளை விரைந்து முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் நடைபெற்று வந்த பாலப்பணியின் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது, பறக்கும் ரெயில் பணிக்கு பாலம் அமைக்கும்போது இரு தூண்களுக்கு இடையே என்பது அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:- "இந்த விபத்து பகுதியில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், பாலம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்" என்றுத் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flying bridge collapse in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->