"உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா" - காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மா ,பலா ,வாழை ஆகிய மூன்று கனிகளுக்கும் சேர்த்து விழா எடுக்க வேண்டும் நினைத்து வருகிற ஜூன் 23ஆம் தேதி புதுக்கோட்டையில் முக்கனி திருவிழா நடைபெற உள்ளது என காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாறன் கூறிவுள்ளார்.

விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக முக்கனிகளை எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு முக்கனிகளின் பயன்களை பற்றி  விவரிப்பதற்காக இந்த முக்கனி திருவிழா  நடைபெற உள்ளதாக ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாறன் கூறிவுள்ளார்.

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 23-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில்  நடைபெறுகிறது. 

காவேரி கூக்குரல் இயக்கம், இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) ஆகிய 4 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


இந்த நிகழ்ச்சி தொடர்பாக  ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் பேசுகையில்,

“விவசாயிகள் தங்களிடம் எவ்வளவு நிலம் இருந்தாலும் அதில் ஒரு சிறு பகுதியில் உணவுக்காடு உற்பத்தி செய்ய வேண்டும். இன்று நம்மிடம்  பழங்களை உட்கொள்ளும் பழக்கம் குறைந்துவிட்டது. துரித உணவுக்கு வேகமாக மாறி வருகிறோம். இதனால் 50% மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தினமும் உழைக்கும் மக்களுக்கே சர்க்கரை நோய் வருகிறது.

மேலும் 2045 - 2050 காலகட்டத்தில் 10% உணவு உற்பத்தி குறையும் என சொல்லப்படுகிறது. காரணம் மண் மலடாகிறது, இந்த மண் வளத்தை கொண்டு 40 அல்லது 50 % வரை மட்டுமே உணவு உற்பத்தி செய்ய முடியும் என சொல்லப்படுகிறது.  

இந்த அழிவை தடுக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேடு, காலநிலை மாற்றம் இதை சீர்ப்படுத்தவும் மரம் வளர்ப்பு தேவையாகிறது. அதுவும் குறிப்பாக பழ மரமாக இருந்தால் நம் ஆரோக்கியம் மேம்படும், சுற்றுச்சுழல் மேம்படும், நிலம் வளமாகும் மேலும் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். இத்தோடு விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும்.

நம் வீட்டை சுற்றி பழ மரங்கள் இருக்க வேண்டும் என்ற நம்மாழ்வார் அவர்களின் கூற்றை விவசாயிகள் மத்தியில் எடுத்துச் செல்லும் நோக்கில் உணவுக்காடு வளர்ப்பு எனும் தலைப்பில் பிரம்மாண்ட கருத்தரங்கையும், முக்கனி திருவிழாவையும் நடத்துகிறோம். இந்த நிகழ்ச்சி தென்னிந்திய அளவில் நடப்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வல்லுனர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா பழங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வாழை ரகங்கள் கண்காட்சியாகவும், விற்பனைகாகவும் வைக்கப்பட உள்ளது.  இத்துடன் முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. 

பலா மரத்திலிருந்து வருமானத்தை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பண்ருட்டியில் கடந்த ஆண்டு பலாப்பழத்திற்கு திருவிழா நடத்தப்பட்டது. வருங்காலத்தில் பலாமரத்தில் மிகப்பெரிய பொருளாதாரம் உள்ளது , அதை விவசாயிகளிடம் கொண்டுசெல்ல வேண்டும். பச்சை பலாப்பழம் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை நிலவு குறைவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. மா பலா வாழை ஆகிய மூன்று கனிகளுக்கும் சேர்த்து விழா எடுக்க வேண்டும் நினைத்து வருகிற ஜூன் 23ஆம் தேதி புதுக்கோட்டையில் முக்கனி திருவிழா நடைபெற உள்ளதாக தெரிவித்தார்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Food Forest Cultivation Grand Mukani Festival Cauvery Cry Movement Announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->