ஓசூர் || மிளகுடன் இருந்த பட்டாணி - மளிகை கடைக்காரருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்.!
food safety department warning grocer for milagu with peas in osoor
ஓசூர் || மிளகுடன் இருந்த பட்டாணி - மளிகை கடைக்காரருக்கு ஆப்பு வைத்த வாடிக்கையாளர்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, நாயக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். விவசாயியான இவர் ஓசூரில் உள்ள ஒரு மளிகை கடையில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி அவர் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மளிகை கடையில் வழக்கம்போல் அரை கிலோ மிளகு பாக்கெட்டை வாங்கியுள்ளார். அந்த மிளகு பாக்கெட்டை வீட்டிற்கு சென்று பிரித்து பார்த்துள்ளார்.
அதில், மிளகுடன் சேர்த்து பாதி அளவு பட்டாணி கலக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் ராஜாராம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மளிகை கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு அந்த கடைக்காரரை எச்சரித்த அதிகாரிகள் பரிசோதனைக்காக கலப்படம் செய்யப்பட்ட மிளகுகளை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
food safety department warning grocer for milagu with peas in osoor