மதுரை-போடி ரயில் சேவை வரும் 15ஆம் தேதி முதல் ! - Seithipunal
Seithipunal


இந்திய ரெயில்வே, நாடு முழுவதும் உள்ள மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதைகளாக மாற்றி வருகிறது.

கடந்த, 2010 டிசம்பர் முதல் மதுரை -போடி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அகல ரயில்பாதை பணி துவங்கியது.

வைகை ஆற்றங் கரையோரம் 87 கிலோ மீட்டர் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் இரயில் பயண சேவை நிறுத்தப்பட்டதை கண்டு மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இருந்த போதிலும், 12 வருடத்திற்க்குப் பின்னர் முதல் கட்டமாக மதுரையிலிருந்து தேனி வரையிலான ரயில் சேவைகளை, கடந்த 2022 டிசம்பர், 26ம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.

எதிர்பாராத இந்த ரயில் சேவை நடைமுறையில் வந்ததை கண்டு உசிலம்பட்டி மற்றும் தேனி, அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

தேனியிலிருந்து போடி வரை 15 கிலோ மீட்டருக்கான பணி முடிவடைந்தது. அதற்கு பின்னர், ரயில் வேக சோதனை ஓட்டம், சிக்னல் செக்கிங் அதிவேக சோதனை ஓட்டம், என பல்வேறு கட்ட இரயில் சோதனை ஓட்டங்கள் சில நாட்களுக்கு முன்னதாக நிறைவுற்றது. மக்கள் அனைவரும் போடிக்கு எப்போது ரயில் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இதைத்தொடர்ந்து வருகின்ற ஜூன் 15 முதல் மதுரை- போடி அகல இரயில் பாதையில் மதுரை- போடிக்கு தினம்தோறும் இரயில் வந்து போக தொடங்கும். அதுமட்டுமில்லாமல் சென்னை- மதுரை துரந்தோ ரயில் நீடிக்கப்படுவதாக புதிய தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் படி போடிக்கு வாரத்தில் (செவ்வாய், வியாழன், ஞாயிறு) மூன்று முறை ஒரு ரயிலும் (துரந்தோ எக்ஸ்பிரஸ்) இயக்க அனைத்து பணிகளும் செய்யப்பட்டது என இரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

For Madurai and Theni Going to be start train facility


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->