கோவையில் பிடிபட்ட வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்ததை தொடர்ந்து இந்த தடையானது கடந்த பதினெட்டாம்18 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 

இதனை அடுத்து தமிழகத்தில் அரசின் உத்தரவை மீறி வெளி மாநில பதிவில் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறதா என போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்திலும் வெளிமாநில பதிவில் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது இன்று காலை சென்னையில் இருந்து கேரளா எர்ணாகுளத்துக்கு செல்வதற்காக வெளிமாநில பதிவில் கொண்ட ஆம்னி பேருந்து கோவை வழியே வந்தது. 

இந்த ஆம்னி பேருந்து கோவை திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே இன்று காலை சென்ற போது போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்து சோதனை மேற்கொண்டனர். பின்னர் பேருந்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்து மத்திய போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பேருந்தில் இருந்த கேரளாவை சேர்ந்த 21 பயணிகளும் அவர்களை சொந்த ஊர் அனுப்புவதற்கான நடவடிக்கையை ஆம்னி பேருந்து நிர்வாகம் செய்து வருகிறது. 

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்திருப்பதாவது, வெளி மாநில பேருந்துகள் தமிழ்நாட்டில் பயணிகளை ஏற்றக்கூடாது. தமிழ்நாடு வழியாக மற்ற மாநிலங்களுக்கு சென்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் இந்த ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்துள்ளோம். இந்த பேருந்தில் கேரளா செல்லக்கூடிய 21 பயணிகள் உள்ளனர். அவர்களுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை ஆம்னி பேருந்து நிர்வாகம் செய்து தரும் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Foreign registration Omni bus seized Coimbatore


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->