சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம்! கொளத்தூர் காவல் உதவி ஆணையர் நெஞ்சுவலியால் மரணம்! - Seithipunal
Seithipunal


சென்னை ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன் நிறுவனம் (ஆா்பிபிஎல்) சாா்பில் பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய பந்தயம் இன்று தொடங்க உள்ளது. 

இதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.

உடனடியாக மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார். 

இதற்கிடையே, இந்தியன் ரேசிங் லீக் மற்றும் பார்முலா 4 ரேசிங்குக்கான பயிற்சிகள் போட்டிகள் இன்று 7 மணிக்கு தொடங்க உள்ளது. இரவு 11 மணி வரை பயிற்சி போட்டிகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Formula 4 Car Race Police Death in Heart Attack


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->