4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற ஜூலை 8, 9, 10 மற்றும் 13 உள்ளிட்ட தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். 

இதனால் காலியான அத்தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four days tasmac shop leave for vikravandi by election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->