இரும்பு ராடால் அடித்து வாலிபர் கொலை - திருப்பத்தூரில் திகில் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் சுகேஷ் என்ற சாமுவேல். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் காதலித்து வந்துள்ளார். 

இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் உள்ளிட்டோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார். இது தொடர்பாக கார்த்திக் தனது தந்தையிடம் நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை செல்வம், அவரது மளிகை கடையில் வேலை செய்யும் பாலாஜி மற்றும் முத்து உள்ளிட்டோருடன் சேர்ந்து சுகேஷை இரும்பு ராடல் சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சுகேஷ் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for love issue in thirupathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->