கொடைக்கானல் | அதிபயங்கர சத்தம்! வெடித்து சிதறியதில், குழந்தை உள்பட 4 பேர் துடிதுடித்தது பலி! - Seithipunal
Seithipunal


கொடைக்கானலில் பரிதாபம்.! வீட்டில் வெடித்து சிதறிய சிலிண்டர் - குழந்தை உள்பட 4 பேர் பலி.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் ஆனந்தகிரி ஒன்றாவது தெருவில் வசித்து வருபவர் சுபாஷ். இவர் தனியார் உணவு விடுதி ஒன்றில் பணி புரிந்து வருகிறார். 

இவருடைய மனைவி அனிதா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. இவர்களுடன் சுபாஷின் மாமியார் புவனேஸ்வரியும் அதே வசித்து வருகின்றார்.

இவர்களுடைய வீட்டின் சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை கவனிக்காத புவனேஸ்வரி இன்று காலை அடுப்பினை பற்ற வைத்துள்ளார். 

அப்போது, திடீரென தீ பற்றியது. இந்தத் தீ விபத்தில் குழந்தை உட்பட நான்கு பேருக்கும் தீ காயம் ஏற்பட்டது. இந்த விபத்தைப் பார்த்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயம் அடைந்த நால்வரையும் உடனடியாக மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died for gas silinder explossion in kodaikanal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->