ஜெயங்கொண்டம் || ஒரே வீட்டில் 4 பேர் உயிரிழப்பு - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள, ஜெயங்கொண்டம் அருகே வளவனேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா-பானுமதி தம்பதியினர். இதில் ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அதனால் பானுமதி, தனது மூன்று மகன்களுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், பானுமதியின் வீடு, கடந்து இரண்டு நாட்களாகப் பூட்டிய படி கிடந்துள்ளது. 

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பானுமதி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் கதவை உடைந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பானுமதி மூன்று குழந்தைகளுடன் சடலமாகக் கிடந்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் படி போலீசார் விரைந்து வந்து, நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில், பானுமதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அதற்காக மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

மேலும், உயிரிழந்த குழந்தைகளின் உடலுக்கு அருகில் ரத்தக்கறை படிந்த குத்து விளக்குகளும் கிடந்துள்ளதனால் தாய் பானுமதி, 3 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா என்று போலீசார் சந்தேகமடைந்து இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died near jeyankondam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->