தாறுமாறாகச் சென்ற கார் - 4 பேர் படுகாயம்.!
four peoples injured for accident in chennai
சென்னையில் உள்ள வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாகச் சென்ற கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மற்ற வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காரை ஓட்டி வந்த பிரகதீஷ் என்பவர் கைது செய்தனர். பின்னர் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
four peoples injured for accident in chennai