கஞ்சாவுடன் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டம் - கடைசியில் கைவரிசையைக் காட்டிய 4 மாணவர்கள் கைது.!   - Seithipunal
Seithipunal


கஞ்சாவுடன் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டம் - கடைசியில் கைவரிசையைக் காட்டிய 4 மாணவர்கள் கைது.!  

சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடைய பிறந்தநாளை உடன் படிக்கும் சக நண்பர்கள் 3 பேர், மற்ற கல்லூரியைச் சேர்ந்த 3 பேர் என்று மொத்தம் ஏழு பேருடன் சேர்ந்து மதுவுடன் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அதே பகுதியில் அமர்ந்து கஞ்சா புகைத்தனர். இதையடுத்து அந்த கும்பல் கொண்டு வந்த கஞ்சா தீர்ந்து விட்டதால் அருகில் இருந்த கல்லூரி மாணவர்களிடம் பேச்சு கொடுத்து தங்களுக்கு கஞ்சா கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்ததால் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவர்கள் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க சங்கிலி, வெள்ளி மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்ததுடன், கல்லூரி மாணவர்களை சரமாரி தாக்கி உள்ளனர். இந்தத் தாக்குதலில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக கல்லூரி மாணவர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன் படி அங்கு சென்ற போலீஸார் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் இந்தச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சக மாணவர்கள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four students arrested threat with knief to friends in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->