தென்காசி : சிறுவனிடம் தகாத முறையில் நடந்த தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை.!
fourteen years jail penalty to man in tenkasi
தென்காசி : சிறுவனிடம் தகாத முறையில் நடந்த தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனிடம் கடந்த 2019-ம் ஆண்டு தகாத முறையில் நடந்து கொண்டார்.
இந்த சம்பவத்தை சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸார், சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த வழக்கு குறித்த விசாரணை திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது விசாரணை முடிந்து சாட்சியங்கள் அடிப்படையில் நீதிபதி அன்புச்செல்வி நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றவாளிக்கு பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆறாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
English Summary
fourteen years jail penalty to man in tenkasi