சதுரங்கவேட்டை பட பாணியில் ரூ.1000 முதலீடு..ரூ.2000 லாபம்! வாட்ஸ் அப்பில் ரூ.89 ஆயிரம் மோசடி! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் செயலியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடையை அனுப்பினால் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி வாலிபரிடம் ரூ.89 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சிவகாமி இவர் சோளிங்கநல்லூரில் உள்ள தனியா நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் குழுவில் இருந்து புதிய நம்பரில் குறுந்தகவல் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது.

அதில் கேட்கப்படும் கேள்விக்கு சரியாக விடையை பூர்த்தி செய்து அனுப்பினால் முதலீடு செய்யும் பணத்துக்கு இரண்டு மடங்காக பணம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதை உண்மை என்று நம்மை சிவகாமி தான் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ.9 ஆயிரம் பணத்தை வங்கி கணக்கில் இருந்து அனுப்பி உள்ளார்.

முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த சிவகாமி புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fraud of Rs 89 thousand on WhatsApp from a young man


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->