மகளிர் தினம்.. மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம் - தொல்லியல் துறை அறிவிப்பு.!
Free entry for mamallapuram tourist places for women's day
மார்ச் 8ம் தேதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதங்களில் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அன்றைய தினம் பெண்களுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
![](https://img.seithipunal.com/media/womens day a.jpg)
இந்த நிலையில் மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி சுற்றிப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
English Summary
Free entry for mamallapuram tourist places for women's day