#BREAKING : குடும்ப தலைவியின் பெயரில் வீடு - தமிழக முதல்வர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வீடுகள் குடும்பத் தலைவிகளின் பெயரில் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர்,

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

ஆண்களை விட பெண்களே அதிக அளவில் கல்வி பயின்று வருகின்றனர். அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தியுள்ளோம் எனவும் கூறினார்.

கட்டணமில்லா பேருந்து பயணத்தின் போது பெண்களின் முகத்தில் தோன்றும் மறுமலர்ச்சி தான் என் வாழ்நாளில் மகிழ்ச்சி  என்றும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை திமுக ஆட்சிதான் வழங்கியது எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free house for women in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->