சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாள்... முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!
Freedom fighter Theeran Chinnamalai birthday is honored by Chief Minister Stalin
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நம் நாட்டின் சுத்தந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமாணவர் மற்றும் தனது இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்தவர்.
இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த நாள் இன்று (ஏப்.17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கிண்டி திரு.வி.க.தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
English Summary
Freedom fighter Theeran Chinnamalai birthday is honored by Chief Minister Stalin