#BREAKING:: அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக நிர்வாகிகள் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார் குறிப்பாக ஜி ஸ்கொயர் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் மீது பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 30,000 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டை இருந்தார்.

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பல ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதுவரை ஜி ஸ்கொயர் நிறுவனம் எந்த ஊழலிலும் ஈடுபட்டதில்லை. எங்கள் நிறுவனத்தின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இதுவரை இருந்ததில்லை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை. தங்கள் நிறுவனம் மீது அவதூறு பரப்பும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார் என ஜி கொயர் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ஜி ஸ்கொயர்  நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 29 பக்க விளக்க அறிக்கையில் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பணப்பதிவர்த்தனைகள். அனைத்து சொத்துக்களும் எவ்வாறு வாங்கப்பட்டது குறித்தான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூஸ் பெயர் நிறுவனத்திற்கு மொத்த வருமானம் ரூ. 38, 827.70 கோடி என்பது முற்றிலும் பொய்யான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜி ஸ்கொயர் நிறுவனம் எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

G square explains Annamalai Allegations


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->