ஜி ஸ்கொயர் ரெய்டு நிறைவு! ஆறாவது நாள் அதிகாலை! வெளியாகுமா அந்த அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இன்று அதிகாலை 3 மணியளவில் ஜி ஸ்கொயர் நிறுவனங்களின் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 2019 ஆம் ஆண்டு தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் தனது பல்வேறு கிளைகளை தொடங்கியது.

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்ற போதே சில ஆவணங்கள் சிக்கியதாகவும் சொல்லப்பட்டது.

2021 ஆம் ஆண்டு 56 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக தகவல் வெளியான நிலையில், இப்போது பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக இந்த நிறுவனத்தின் இரு புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது. ஆறாவது நாளான இன்று வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ளது.

இந்த வருமான வரி சோதனையில் வருமானவரித்துறை அதிகாரிகள் என்னென்ன கைப்பற்றினார்கள் என்பது குறித்து தகவல் இன்று மாலை அல்லது நாளை வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆளும் திமுகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கும் தங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

G Square Raid End 23


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->