காதலியை கிண்டல் செய்த பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு - கன்னியாகுமரியில் பரபரப்பு..!
gang attack to student in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கீழமறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது மாணவர் ஒருவர் தனியார் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆத்தங்கரை மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் மாணவரை சராமாரியாகத் தாக்கியது.
தாக்குதல் நடத்திய கும்பல் மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது. படுகாயமடைந்த மாணவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாணவன் அளித்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ஒருவரின் காதலியை மாணவன் கிண்டல் செய்ததால் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாக உள்ள 4 பேர் கொண்ட கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
gang attack to student in kanniyakumari