கோவில் அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்ட வாலிபர்.! பீர் பாட்டிலால் குத்திய கும்பல்.. அரக்கோணத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோவில் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட வாலிபரை 6 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் அருகே 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்தியுள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த நாகராஜ்(38) என்பவர் கோவில் அருகில் ஏன் மது குடிக்கிறீர்கள் என கேட்டு, அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பீர் பாட்டிலை உடைத்து நாகராஜை குத்தியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த நாகராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் இதேபோன்று அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதாகவும், அவர்களை கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gang stabbed young man with beer bottle in arakkonam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->