ஆட்டோவில் இருந்த அழுகிய உருளை கிழங்கு மூட்டைகள்: தப்ப முயன்ற ஓட்டுனர்கள்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்திற்கு ஓசூரில் இருந்து உருளைக்கிழங்குகளை மினி ஆட்டோ மூலம் ஏற்றி ராஜபாளையம் வழியாக வந்து கொண்டிருந்தது. 

தென்காசி சோதனை சாவடி அருகே அவர்கள் வந்து கொண்டிருந்த போது அங்கிருந்த போலீசார் லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்போது அதில் அழுகிய உருளைக்கிழங்கு மூட்டைகள் கிடந்தன. அழுகிய உருளைக்கிழங்கு மூட்டைகளை இவ்வளவு தொலைவில் எதற்காக கொண்டு வர வேண்டும் என போலீசார் லோடு ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உடன் வந்த ஒருவரை விசாரணை செய்துள்ளனர். 

அப்போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உருளைக்கிழங்கு மூட்டைகளை பிரித்து பார்த்த போது மூட்டைகளின் நடுவில் ஏராளமான பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. 

அதனை பிரித்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ஓட்டுனர் உள்பட 2 பேர் உடனடியாக தப்பிக்க முயன்றனர். 

அவர்களை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து அதிலிருந்து சுமார் 105 கிலோ கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர். 

தென்காசி வரையில் ஏராளமான சோதனை சாவடிகள் இருக்கும் நிலையில் அவற்றில் எல்லாம் சிக்காமல் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்டவர்களிடம் கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தனர் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ganja seized auto drivers arrested 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->