திடீர் திருப்பம்! சப்ளை இங்க இல்லை..இலங்கை! சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் : ஆந்திராவில் இருந்து வாங்கிவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கடை தெருவில் தனிப்படை போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 3 சொகுசு காரர்களை மறித்து சோதனை செய்தனர்.

அப்போது அந்த கார்களில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 200 கிலோ கஞ்சா இருந்தது பின்னர் கார்களில் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அம்மான்குளம் எடுப்பகுதியைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி, அவரது தம்பி சிவமூர்த்தி, திருப்பூர் மாவட்டம் இடுபை திருநகர் கார்டன் பகுதியை சேர்ந்த மணிராஜ், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த கௌதம் ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்தது.

இவர்கள் ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சாவை வேதாரண்யம் பகுதிக்கு கொண்டு வந்து அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிடிபட்ட 4 பேரையும் கஞ்சா மூட்டைகளையும் தனிப்படை போலீஸ்சார் கைது செய்தனர். பின்னர்  போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ganja worth Rs 1 crore seized by police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->