"டம்மி ஒப்பந்ததாரர்கள்" மூலம் மெகா ஊழல்.!! லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்.!! - Seithipunal
Seithipunal


சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் தென் சென்னையில் ஓ.எம்.ஆர் பகுதியில் மேற்கொண்டுள்ள ரூ.738 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகளில் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

தமிழ்நாடு லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்திற்கு எழுதிய கடிதத்தில் "சென்னை‌ மாநகராட்சி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் துணையோடு ஜெர்மன் வங்கியின் நிதியுதவி திட்டத்திற்கான டெண்டர்களை முறைகேடாக டம்மி ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் தொழில்நுட்ப மதிப்பீடு, நிதி ஏலம் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்பே, "டெண்டர் காலாவதி தேதிக்கு முன்பே, டெண்டர்கள் பெரிய ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அதிகாரிகள், கண்காணிப்பு பொறியாளர் (புயல் நீர் வடிகால்), டெண்டர் அழைக்கும் அதிகாரி மற்றும் அரசியல்வாதிகள் மூலம் முறைகேடாக டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஊழல் நடவடிக்கைகள் நீண்ட காலமாக நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கண்காணிப்பு பொறியாளரிடம் விசாரித்தபோது, அவர் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி செயல்படுவதாகக் தெரிவித்ததாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இது சென்னை மாநகராட்சிக்கு நஷ்டத்தை உருவாக்கும், அரசு‌ டெண்டர்களில் போட்டியை உருவாக்க டம்மி ஒப்பந்ததாரர்கள் மூலம் டெண்டர் கோரப்படுகிறது என பட்டியலோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பொதுமக்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GCCWA complaint on GCC corruption in DVAC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->