ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு - மகிழ்ச்சியில் விவசாயிகள்.!! - Seithipunal
Seithipunal


ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு - மகிழ்ச்சியில் விவசாயிகள்.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே ஆத்தூரில், 500 ஏக்கரில் வெற்றிலை பயிரிடப்படுகிறது. வெற்றிலையை தனித்து காட்டும் அதன் காரம், ஆத்தூரில் அதிகளவில் உள்ளது. 

வெற்றிலையின் இந்தத் தனித்தன்மைக்கு ஆத்தூர் காரணமாகும். தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தால் கணிசமான காரத்தன்மையுடன், அதிக ஜீரண சக்தியுடன் இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

பொதுவாக வெற்றிலை அறுவடை செய்யப்பட்டால், கோடையில் மூன்று முதல் ஐந்து நாட்களும், குளிர்காலத்தில் ஐந்து முதல் ஆறு நாட்களும் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்கும். ஆனால் ஆத்தூர் வெற்றிலையை பொறுத்தளவில், எந்த காலநிலை மாற்றத்திலும் ஏழு முதல் பத்து நாட்கள் வரை அதன் தன்மை மாறாமல் இருக்கும்.

இந்த ஆத்தூர் வெற்றிலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது, அப்பகுதி விவசாயிகளிடம் பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆத்தூர் வெற்றிலையின் விவசாயம் மேலும் தழைப்பதற்கு, மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கவும், காப்பீடு வசதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

geo code for authoor betel leaf


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->