பரோட்டா சாப்பிட்டு தூங்கிய மருத்துவ கல்லூரி மாணவி - பிணமாக மீட்கப்பட்ட கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் பரோட்டா சாப்பிட்ட இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்த மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள பெரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா என்பவர், இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். இவர் நேற்றிரவு பரோட்டா சாப்பிட்டு விட்டு வழக்கம்போல தூங்கச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை மாணவி கீர்த்தனாவின் உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. இதை பார்த்த அவரது பெற்றோர், உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கீர்த்தனாவை கொண்டு சென்றனர். அங்கு கீர்த்தனாவைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், கீர்த்தனா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், மருத்துவமனைக்கு சென்று, கீர்த்தனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl died for ate parotto in coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->