பட்டியலின மாணவிக்கு பாலியல் தொல்லை! தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் கைது.. அரசுப்பள்ளியில் நடந்த அவலம் RTI மூலம் அம்பலம்! - Seithipunal
Seithipunal


கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோவை பேரூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்த 40 வயதான ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து மேலும் தகவல் அறியும் பொருட்டு பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மேலும் பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

அதில் அம்மாணவியின் பெற்றோர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளித் தலைமை ஆசிரியர், மேலும் மாணவியை மிரட்டியதாக அறிவியல் ஆசிரியை, ஆங்கில ஆசிரியர், மற்றொரு பெண் ஆசிரியை மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் உட்பட மொத்தம் ஆறு பேர் மீது போக்ஸோ மற்றும் எஸ்.சி , எஸ். டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இத்தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாணவியிடம் பேரூர் மகளிர் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் மேலும் 12 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl student abused by school teacher 6 arrested including Head Master


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->