#நெல்லை || கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக - விஜயகாந்த் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல் குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்து  ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில், மூவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.  அதில் செல்வம் உயிரிழந்தார். இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக அறிவித்தார்.

குவாரியில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Give severe punishment to those responsible for the Calcutta crash


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->