சுட்டெரிக்கும் வெயில்... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க ஜி.கே.வாசன் வேண்டுகோள்.!
GK Vasan says Heavy heat schools postpone opening
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என அருகே ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதில்,
கோடைகால வெயிலின் தாக்கத்திலிருந்து பள்ளி மாணவர்களை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் கால்நடைகள் பாதிக்கப்படுகிறது.
இப்பொழுது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெப்பத்தால் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் சிரமம் அடைகின்றனர்.
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதிலும் தடை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் அதிக அளவிலான வெப்பநிலையால் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் மயங்கி விழுந்து சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இதனால் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய சூழலில் வெளி மாநிலங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு பள்ளிகளும், மாணவர்களின் நலனை கருதி ஜூன் 6-ம் தேதி பள்ளிகளில் வகுப்புகளை தொடங்குவதற்கு பதிலாக ஒரு வார காலம் தள்ளி பள்ளிகளை தொடங்க ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
GK Vasan says Heavy heat schools postpone opening