இளையராஜாவின் கருத்துக்கு ஜி.கே.வாசன் ஆதரவு.! - Seithipunal
Seithipunal


இசைஞானி இளையராஜா அவர்களின் கருத்தை சர்ச்சையாக்குவது சரியானதல்ல என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இசைஞானி இளையராஜா அவர்கள் தனது இசைத்திறமையால் தமிழ் நாட்டின் புகழை, இந்தியாவின் புகழை இசையின் மூலம் உலக அளவில் நிலைநாட்டி, பரப்புவது பெரிதும் பாராட்டத்தக்கது. 

பொதுவாக ஒவ்வொரு தனி மனிதருக்கும், ஒவ்வொரு விஷயத்திலும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம். அதனை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயக நாட்டில் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது. 

இந்நிலையில் இது போன்ற கருத்துக்கு அரசியல் சாயம் பூசி சர்ச்சையாக்குவது சரியல்ல. தேசியத் தலைவர்களையும், மாநிலத் தலைவர்களையும் பாராட்டுவதும், புகழ்வதும் புதிதல்ல, தவறல்ல. 

எனவே இசைஞானியின் சொந்த கருத்து சர்ச்சையாக்கப் படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gk Vasan support Ilayaraja opinion


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->