செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜி.கே.வாசன், அவர்களின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் பொது மக்களுக்கான மருத்துவப் பணியில் செவிலியர்கள் தங்களை அர்ப்பணித்துக்கொள்வது போற்றுதலுக்குரியது. 

உயிர்காக்கும் பணியில் செவிலியர்களின் செயல்பாடுகள் பெரிதும் பாராட்டுக்குரியது. 

மனிதர்களின் மறுவாழ்வுக்கு எதிர்பார்ப்பில்லாமல் பணிபுரிவதில் செவிலியர்களின் பங்கு பெரும் பங்காகும். 

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை நன்றியோடு நினைத்து பார்க்க வேண்டும். 

தன்னலமின்றி பொதுநலத்தோடு வெள்ளை உடையில், மனித நேயத்தோடு மருத்துவ சேவையை செய்யும் செவிலியர்கள் அனைவரும் முன்னேற்றமடைந்து, மகிழ்வுடன், நலமுடன், வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும். 

மத்திய மாநில அரசுகள், செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 

மேலும் மத்திய மாநில அரசுகள் செவிலியர்களுக்கு என சிறப்புத்திட்டங்கள் வகுத்து, செயல்படுத்தி, சலுகைகள் வழங்கி அவர்களின் வளமான நல்வாழ்வுக்கு துணை நிற்க வேண்டும். 

உயிர்காக்கும் மருத்துப் பணியில் தங்களுக்குள்ள கடமையை, பொறுப்பை சேவையுள்ளத்தோடு மேற்கொள்ளும் செவிலியர்களுக்கு உலக செவிலியர் தின நல்வாழ்த்துக்களை த.மா.கா சார்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVasan wished nurses day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->