தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் எதிர்கட்சிகளில் ஒன்றான தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் பிரபல நடிகரும், த.வெ.க.கட்சியின் தலைவருமான விஜய் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது கோட் படத்தின் இயக்குநர் வெட்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளரும் உடன் உள்ளனர்.

இந்த சந்திப்பு இந்தக் கோட் படத்தில் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் காண்பிக்க அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 22-ந்தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்யவுள்ளார்.

மேலும், ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் அறிவித்துள்ளதால், கோட் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வருகிற 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goat movie team visit premalatha vijayakant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->