சென்னையில் அரசு பேருந்து ஊழியர்கள் இன்று போராட்டம்..!!
Government bus workers strike today in Chennai
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மக்களுக்கான சேவை மனப்பான்மையுடன் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் பெண்கள், மாணவர்கள், முதியோர்கள், ஊனமுற்றோர்களுக்க இலவச பேருந்து பயணம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் பங்களிப்புடன் பேருந்துகளை இயக்கக் கூடிய வகையில் மாநகர் போக்குவரத்து கழகம் புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கான முதற்கட்ட ஒப்பந்தப்புள்ளியும் சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் கோரியுள்ளது.
"Grace cost contract" முறையில் நடப்பு நிதி ஆண்டில் 500 பேருந்துகளும் 2025 ஆம் ஆண்டு 500 பேருந்துகளும் என மொத்தம் ஆயிரம் பேருந்துகள் இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிராஸ் காஸ்ட் காண்ட்ரக்ட் முறையில் இந்த பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து இன்று அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். மாநகர போக்குவரத்து கழகத்தை கண்டித்து இன்று அனைத்து பணிமனைகள் முன்பு சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் போராட்டம் நடத்த உள்ளது.
English Summary
Government bus workers strike today in Chennai