அரசு கல்லூரிகளில் 4000 பணியிடங்களை நியமிக்க அரசு முடிவு..!  - Seithipunal
Seithipunal


உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ''அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில், 4,000 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, இன்னும் 10 நாட்களில் வெளியிடப்படும்,'' என்று தெரிவித்தார்.

நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த, 2012 -ம் ஆண்டு நியமிக்கப்பட்ட, 955 அரசு கலை கல்லுாரி ஆசிரியர்கள், அவர்களின் பயிற்சி காலத்தை தவிர மற்ற ஆண்டுகளுக்கு, பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த ஆட்சியில் அரசு பல்கலைகழகங்களின் கீழ் செயல்பட்ட, நாற்பத்தொரு உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக மாற்றப்படும் என்று, அறிவித்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தற்போது, அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்ட கல்லுாரிகளின் செலவிற்க்கு, அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு உயர் கல்வி துறை வழியாக ஊதியம் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இதற்கான ஆசிரியர் நியமன அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. இன்னும் 10 நாட்களில் வெளியிடும். இதில் தேர்ச்சி பெற்று, நேர்முக தேர்வுக்கு தகுதி பெறும் ஆசிரியர்களுக்கு, விதிகளுக்கு உட்பட்டு சலுகை அளிக்கப்படும்.

மேலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஆசிரியர் பதவிக்கு, 1,030 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விரைவில், பணி நியமன ஆணையை வழங்க உள்ளார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள இளநிலை படிப்புக்கான இடங்களுக்கு, 'வராண்டா அட்மிஷன்' முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.  இதுவரை ஆசிரியருக்கான காலி பணியிடங்களை கல்லுாரிகளில் நேரடியாக நிரப்பப்பட்ட நிலையில்,  இனி, கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் மண்டல அலுவலகங்கள் வழியாக நிரப்பப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government college 4000 places fill


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->