மத்திய அரசு நிதியில் வழங்கும் வண்டியை கட்சி வண்டியாக மாற்றும் மாநில அரசு.. சர்ச்சையை ஏற்படுத்திய கருணாநிதி புகைப்படம்..!
government fund produce vechicle karunanithi photo
மத்திய அரசு நிதியில் வழங்கப்படும் விற்பனை வண்டியில், முன்னாள் முதல்வரான கருணாநிதியின் படம் மற்றும் அதில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் ஹிந்தியில் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில், சாலையோரங்களில் தள்ளுவண்டி கடை அமைத்து பூ, காய்கறி, பழங்கள், உணவு வகை போன்றவற்றை விற்பனை செய்வோர், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, கடையை எளிதில் நகர்த்தி சென்று, விற்பனை செய்வதற்கு வசதியாக இருக்கும் வகையில், விற்பனை வண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், இந்த வண்டி தயாரிப்புக்கான தொகையை மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்திற்காக, மாநகராட்சிக்கு, ரூ.1.05 கோடி நிதி வழங்கப்பட்டது.
முதல்கட்டமாக, மே 30ம் தேதி அமைச்சர் முத்துசாமி, 40 விற்பனை வண்டிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், 83 விற்பனை வண்டிகளை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வண்டிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் படம் இடம் பெற்றுள்ளது. மேலும் ஹிந்தியில், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் என்றும் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது, மத்திய அரசு நிதியில் பயனாளிகளுக்கு வழங்கும் விற்பனை வண்டியில் கருணாநிதி படம் எந்த அடிப்படையில் இடம் பெற்றுள்ளது? அரசு நிதியில் வழங்கும் வண்டியை கட்சி வண்டியாக மாற்றி விட்டனர்.
பிரதமர், மத்திய அமைச்சரின் படத்தை ஏன் இடம் பெற செய்யவில்லை? அதுபோல ஹிந்தி திணிப்பை விமர்சித்து தார் பூசி அழிப்போர், இந்த வண்டியில் உள்ள ஹிந்தி வாசகங்களை கண்டு கொள்ளாதது ஏன்? என்று பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
English Summary
government fund produce vechicle karunanithi photo