அரசு விடுதியில் உணவு சாப்பிட்ட 5 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர், கோட்டூர் அருகே உள்ள தொண்டாமுத்தூர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் 34 மாணவர்கள் தங்கி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

விடுதியில் நேற்று இரவு 20 மாணவர்கள் மட்டும் இருந்த நிலையில் மாணவர்களுக்காக விடுதியில் 8:30 மணி அளவில் சாப்பாடு, ரசம் மற்றும் முட்டை ஆகியவற்றை உணவாக வழங்கப்பட்டது. 

இதில் உடுமலையைச் சேர்ந்த மாணவர் சபரீஷ், ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் முத்து கணேஷ் (வயது 12) உள்பட 5 மாணவர்கள் மதியம் மீதி இருந்த பாசிப்பருப்பு குழம்பை சாப்பிட்டனர். 

இதனை சாப்பிட்டு சிறிது நேரத்தில் 5 மாணவர்களுக்கும் தொடர்ந்து வயிறு வலி ஏற்பட்டு வாந்தி எடுத்தனர். இதனை அடுத்து மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக மயக்கம் அடைந்தனர். 

இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த விடுதி கண்காணிப்பாளர் உடனடியாக 108 அவசர ஊர்தி மூலம் 5 மாணவர்களையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

அங்கு மருத்துவர்கள் மாணவர்களை தீவிர பரிசோதனை செய்தனர். பின்னர் மருத்துவர்கள், கெட்டுப்போன உணவை மாணவர்கள் சாப்பிட்டதால் வயிறு வலி, வாந்தி, மயக்கம் என ஏற்பட்டுள்ளது என்றார். 

மேலும் மாணவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government hostel food eat students treated hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->