அரசு வேலை வேணுமா எங்களிடம் கேளுங்கள்! நூதன முறையில் பண மோசடி செய்தவர்கள் கைது!
government job cheated money sophisticated arrested
திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு மதுரை வருமானவரித்துறை அலுவலகப் பகுதியில் வசிக்கும் சண்முகதுரை (வயது 58) மற்றும் அவரது மகள் அர்ச்சனா, தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய குணசேகரன் ஆகிய 3 பேரும் ஒரு நண்பர் மூலம் செல்வராஜ்க்கு அறிமுகமாகினர்.
இவர்கள் செல்வராஜிடம் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் உயர் அதிகாரிகளிடம் அதிக பழக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் உங்களுக்கோ உங்களைச் சார்ந்த நண்பருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களது பேச்சை உண்மை என நம்பிய செல்வராஜ், நண்பர் ராஜேந்திரன் மற்றும் உறவினர் ராஜேஷ் இருவருக்கும் ரேசன் கடையில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
இதற்காக இவர்கள் 2020இல் இருந்து பல்வேறு தவணைகள் மூலம் ரூ. 15 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால் தெரிவித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் இதுகுறித்து மதுரை மாநகர காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகதுரை அவருடைய மகள் மற்றும் குணசேகரன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சண்முகத்துறையை போலீசார் கைது செய்தனர்.
English Summary
government job cheated money sophisticated arrested