வீடு தேடி வந்த அரசு வேலை ஆர்டர்! பல லட்சம் கொடுத்த பழக்கடைகாரர் நீதிமன்றத்தில் வழக்கு! - Seithipunal
Seithipunal


சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 62) இவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி. பட்டதாரி படிப்பை முடித்த இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக திருமங்கலம் நாச்சியார்புரத்தில் உள்ள ஒரு கடைக்கு செல்வது வழக்கம். 

இதன் மூலம் கடையின் உரிமையாளர் முத்து, பாண்டியராஜனுக்கு அறிமுகமானார். அதனால் மகாலட்சுமி முத்துவிடம் அரசு பொது தேர்வுக்காக தான் படித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து முத்து பாண்டியராஜனை நேரில் சந்தித்து தனக்கு சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த ரவி என்பவரை தெரியும். அவருக்கு தலைமைச் செயலகத்தில் நல்ல பழக்கம் உள்ளது. 

அவர் ஏற்கனவே பலருக்கும் அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய பாண்டியராஜன் ரவியிடம் இது குறித்து விசாரித்த போது அவர் வேலை வாங்கித் தர முடியும் என்றும் அதற்கு ரூ. 5.5  லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து பாண்டியராஜன் ரவிக்கு கடந்த ஆண்டு 6 தவணைகள் மூலம் ரூ. 5.5  லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை. 

இது குறித்து ரவியிடம் கேட்டபோது ரவி, விரைவில் ஆடர் வரும் என தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தபடி வணிகத் துறையில் இருந்து மகாலட்சுமிக்கு ஆர்டர் வந்தது. 

ஆனால் மகாலட்சுமி அது குறித்து விசாரணை செய்த போது ஆர்டர் போலியானது என தெரியவந்தது. இதனை அடுத்து ரவி மற்றும் முத்துவிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு பாண்டியராஜன் கேட்டுள்ளார். 

ஆனால் அவர்கள் பணத்தை தர முடியாது என தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியராஜன் இது குறித்து சிவகாசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் படி திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government job get shopkeeper fraud 5 lakhs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->