விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை - அதிகாரிகளுக்கு துணை முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு அரசு வேலை தருவது குறித்து உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் துணை முதல்வர் உதயநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

”சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் 100 பேருக்கு முதற்கட்டமாக அரசுத்துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆகவே, இதற்கான பணி நியமன ஆணைகளை விரைந்து தயார் செய்வது தொடர்பான உயர் நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தினோம். ஒவ்வொரு துறையிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் கண்டறியப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசு உயரதிகாரிகளை கேட்டுக் கொண்டோம். 

விளையாட்டுத்துறையை நோக்கி வரும் வீரர்களின் எதிர்காலம் சிறந்திட நம் திராவிட மாடல் அரசு அவர்களுக்கு என்றும் துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த முடிவு விளையாட்டு வீரர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government job to sports players deputy cm uthayanithi order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->