அரசு  வேலை வாங்கி தருவதாக 29 பேரிடம் கைவரிசை: வெளியானது தம்பதியின் ஏமாற்று வேலைகள்! - Seithipunal
Seithipunal


ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி வரை பணமோசடியில் ஈடுபட்ட தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருபவர்கள் செந்தில்குமார் மற்றும் அறிவழகி தம்பதி. இவர்கள் சுற்று கிராமங்களில் அரசு வேலைக்காக விண்ணப்பிக்க வருபவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக தெரிவித்து ஒவ்வொருவரிடம் ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். 

இந்நிலையில் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரிடம் இந்த தம்பதி ரூ. 1 லட்சம் பணம் பெற்றதாக தெரிகிறது. 

இதனை அடுத்து சங்கீதா காவல்துறையினர் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார் மற்றும் அறிவழகி தம்பதியை கைது செய்தனர். 

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் 29 பேரிடம் ரூ. 1 கோடி வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 4லட்சம் ரொக்க பணம் மற்றும் 6 சவரன் நகையை பறிமுதல் செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government jobs offered cheating couple arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->