கார் ஓட்டுனர்களுக்கு ஓய்வுக்கூடம் - கட்டிட விதிகளை மாற்றி அரசாணை வெளியீடு.!  - Seithipunal
Seithipunal


கார் ஓட்டுனர்களுக்கு ஓய்வுக்கூடம் - கட்டிட விதிகளை மாற்றி அரசாணை வெளியீடு.! 

தமிழகத்தில் ஓட்டுனர்களுக்கு நகர்ப்புறங்களில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் ஓய்வுக்கூடம் அமைக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்து வீட்டுவசதித்துறை செயலர் அபூர்வா அரசாணை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தின் தலைமைச் செயலராக இருந்த வெ.இறையன்பு, வீட்டு வசதித்துறை செயலருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கார் ஓட்டுநர்கள் தங்குவதற்கான ஓய்வுக் கூடங்களை அமைக்க வேண்டும். 

அதற்காக,பெருநகரங்கள், சுற்றுலாப் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் கட்டுமானத்துக்காக திட்ட அனுமதிகோரும் போது, இதுேபான்ற ஓட்டுநர்களுக்கான தங்கும் கூடத்தை அமைக்க வலியுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில், வீட்டுவசதித்துறை செயலர் அபூர்வா, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி சட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் மேற்கொண்டு அரசாணை பிறப்பித்துள்ளார். 

அந்த அரசாணையில், "தமிழகத்தில் ஓட்டல்கள் மற்றும் தங்கும்விடுதிகளில், கார் ஓட்டுநர்களுக்காக ஒவ்வொரு கார் நிறுத்தும் இடத்திற்கும் ஒரு படுக்கை வசதிகொண்ட ஓய்வுக்கூடத்தை ஏற்படுத்த வேண்டும். 

அந்த ஓய்வுக் கூடத்தில் 8 படுக்கைகளுக்கு தலா ஒரு கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும். இந்த ஓய்வுக்கூடம் ஓட்டலில் இருந்து 250 மீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும்" என்று விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government Order for car drivers rest room in hotel and hostel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->