#தஞ்சாவூர் || அதிவேகமாக சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பலி.!
Government school principal killed in motorcycle collision in Thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிவேகமாக சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியரான ராஜி என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த தென்னூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தனது ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க சென்றுள்ளார்.
அப்போது அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவன் ஆசிரியர் மீது மோதி உள்ளான். இதில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் சிறுவர்கள் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்ட கூடாது என காவல்துறையினர் எச்சரித்த பின்னரும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Government school principal killed in motorcycle collision in Thanjavur