ராமநாதபுரம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் அரிவாளால் வெட்டிக் கொலை.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி செட்டியார் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன்-சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு ஹரிணிஸ்ரீ என்ற மகளும், சபரிஸ்ரீ என்ற மகனும் உள்ளனர். இதில் கண்ணன் கமுதி அருகே கே.பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கண்ணன் நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து கே.பாப்பாங்குளத்தில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இவர் கே.பாப்பாங்குளம் விலக்கு சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென 4 பேர் கொண்ட கும்பல் அவரது இருசக்கர வாகனத்தை ஆயுதங்களுடன் வழிமறித்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சுதாரித்துக்கொண்டு தப்ப முயன்றார். ஆனால், அந்த கும்பல் கண்ணனை சுற்றி வளைத்து கழுத்தில் வெட்டினார்கள். இதில் அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல், அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். 

இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government school teacher murder in ramanathapuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->